உள்ளூர் செய்திகள்

குன்னூா் வெலிங்டன் ராணுவ முகாமில் குழந்தைகளுக்கான பல்வேறு சாகச போட்டிகள்

Published On 2023-05-28 14:34 IST   |   Update On 2023-05-28 14:34:00 IST
  • கோடை கால நிகழ்ச்சிகள் மே 2-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
  • நேற்று நடந்த முகாமில் மொத்தம் 110 போ் கலந்து கொண்டனர்.

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூா் வெலிங்டன் ராணுவ முகாமில் குழந்தைகளுக்கான 10 நாள் கோடை கால சாகச முகாம் நடந்தது.

இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றனர். ஆண்டுதோறும் வெலிங்டன் ராணுவ முகாம் சாா்பில் கோடைக்கால நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அதுபோல இந்த ஆண்டிற்கான கோடை கால நிகழ்ச்சிகள் மே 2-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று நடந்த முகாமில் மொத்தம் 110 போ் கலந்து கொண்டனர்.

இதில் குதிரை சவாரி, ஏா் ரைபிள் மற்றும் பிஸ்டல் ஷூட்டிங், ட்ரெக்கிங், படகு சவாரி, உடற்பயிற்சி என பல்வேறு சாகச போட்டிகள் நடந்தது. மேலும், நாய்களை கையாளுதல், காயம்பட்ட விலங்குகளை பராமரித்தல் மற்றும் முதியோா் இல்லத்தில் ஒரு நாள் முழுவதும் சேவையில் ஈடுபடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்று நடும் நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

குழந்தைகளை பொறுப்புள்ள குடிமகனாக மாற்றும் வகையில் சாகச உணா்வையும், சமூக விழிப்புணா்வையும் ஏற்படுத்த இந்த முகாம் நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

Tags:    

Similar News