வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
- கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், அபிஷேக தீர்த்தம் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது.
- மூலவர் விநாயகருக்கு பூஜைகள் செய்து மகாதீபாராதனை செய்யப்பட்டது. பின்னர், சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசனட்டியில் உள்ள ஸ்ரீ சாய் நகரில் புதிதாக வரசித்தி விநாயகர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் வளாகத்தில், முருகன், மகாலட்சுமி, ஆஞ்சநேயர், சாய்பாபா மற்றும் நவக்கிரகங்கள் சன்னிதிகளும் கட்டப்பட்டுள்ளன.
சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகளுக்கு பின்னர், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், அபிஷேக தீர்த்தம் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, மூலவர் விநாயகருக்கு பூஜைகள் செய்து மகாதீபாராதனை செய்யப்பட்டது. பின்னர், சர்வ தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் சத்யா, மாநகராட்சி மண்டல காந்திமதி கண்ணன், மாநகராட்சி பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள், விழா குழுவினர் கலந்து கொண்டனர் விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.