உள்ளூர் செய்திகள்
விழாவில் பரிசுகள் வழங்கிய போது எடுத்தபடம்.

தேனி: வள்ளலார் முப்பெரும் விழா

Published On 2023-04-03 07:54 GMT   |   Update On 2023-04-03 07:54 GMT
  • விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ், விருதுகள் வழங்கப்பட்டது.
  • முப்பெரும் விழா இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொண்டாட ப்பட்டது.

தேனி:

தேனி மாவட்டம் அல்லி நகரம் நகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், வள்ளலார் முப்பெரும் விழா நடை பெற்றது.

விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ், விருதுகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி வழங்கினார். வள்ளலார் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற 200 வது ஆண்டு தொடக்கமும், தருமச்சாலை தொடங்கி 156-வது ஆண்டு தொடக்கமும், ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டும் சேர்ந்து நினைவுகூறும் விதமாக முப்பெரும் விழா இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொண்டாட ப்பட்டது.

இவ்விழாவில், இந்து சமய அறநிலை யத்துறை இணை ஆணையர் பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News