உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை பகுதியில் அதியமான் கல்வி நிறுவனங்கள் சார்பில் மாணவர்கள் சுத்தம் செய்த காட்சி.

ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்கள் சார்பில் தூய்மை பணி

Published On 2023-10-03 16:00 IST   |   Update On 2023-10-03 16:00:00 IST
  • ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்கள் சார்பில் தூய்மை பணி நடைபெற்றது.
  • மாணவர்கள் கலந்து கொண்டனர்-

தூய்மை பாரதம் இயக்கத்தில் பங்கேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை தூய்மை செய்ய பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அதியமான் பப்ளிக் பள்ளி, அதியமான் மகளிர் கலைமற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அதியமான் மகளிர் கல்வியியல் கல்லூரியை சேர்ந்த பாரதசாரண, சாரணியார்கள், குருளையார் மற்றும் நீலப்பறவையார், ஜுனியார் ரெட் கிராஸ் மாணவ, மாணவிகள், யூத் ரெட் கிராஸ் மாணவிகள் மற்றும் ஆசிரியார்கள், பேராசிரியார்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

ஊத்தங்கரை 4 முனை சந்திப்பு, அரசு மருத்துவ மனை, பஸ் நிலையம், கல்லாவி சாலை, போலீஸ் நிலையம், பழைய கடைவீதி மற்றும் வழிபாட்டு தலங்கள் ஆகிய பகுதிகளை அவர்கள் சுத்தம் செய்தனர்.

அதைதொடர்ந்து தூய்மை பாரதம் இயக்கத்தில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு தூய்மையின் நோக்கம் மற்றும் அதன் நன்மைகளை பற்றி அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் சிறப்புரையாற்றினார்.

Similar News