உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரத்தில் சிலம்பம் விளையாடி அசத்திய அமெரிக்கா-சுவிட்சர்லாந்து தற்காப்புக்கலை வீரர்கள்

Published On 2025-08-19 13:07 IST   |   Update On 2025-08-19 13:07:00 IST
  • தமிழ்நாட்டை சேர்ந்த கோபூடோ கிருஷ்ணமூர்த்தியும் பங்கேற்றார்.
  • “போதிதர்மர்” வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதை வழங்கி கௌரவித்தது.

மாமல்லபுரம்:

சென்னை குயின் மேரி கல்லூரியின் உடற்கல்வித்துறை சார்பில், பெண்களுக்கான தற்காப்புக்கலை குறித்து சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் பங்கேற்பதற்காக அமெரிக்கா நாட்டு தற்காப்புக்கலை பயிற்சியாளர் கியோசி டிமோதி, சுவிட்சர்லாந்து கியோசி டெல்ஹம், தைவான் நாட்டு ஐஹி ஆகியோர் வந்திருந்தனர். இவர்கள்களுடன் தமிழ்நாட்டை சேர்ந்த கோபூடோ கிருஷ்ணமூர்த்தியும் பங்கேற்றார்.

பின்னர் இவர்கள் 4 பேரையும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையகம், மாமல்லபுரம் வரவழைத்து அவர்களுக்கு "போதிதர்மர்" வாழ்நாள் சாதனையாளர் என்ற விருதை வழங்கி கௌரவித்தது. அப்போது விழா அரங்கத்தில் இருந்த சிலம்பம் கம்புகளை எடுத்து, அமெரிக்க நாட்டு தற்காப்புக்கலை வீரரும், சுவிட்சர்லாந்து வீரரும் முறையாக தத்ரூபமாக சிலம்பம் சுற்றி சண்டையிட்டனர்.

இது அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது. மன்சூரியா தற்காப்பு கலையின் தேசிய தலைவர் மல்லை சத்யா, செயலாளர் மாஸ்டர் அசோக்குமார், மாமல்லன், இளையராஜா, உள்ளிட்ட குங்ஃபூ வீரர்கள் பலர் விழாவில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News