உள்ளூர் செய்திகள்

கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்

Published On 2022-07-15 10:17 GMT   |   Update On 2022-07-15 10:18 GMT
  • சீர்காழி ஈசானிய தெருவில் அக்னிபுரீஸ்வரர் கோவில் அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
  • மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்க விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

சீர்காழி:

சீர்காழி ஈசானிய தெருவில் அக்னிபுரீஸ்வரர் கோவில் அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கதை ஆர்ப்பாக்கம் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து இதே பகுதியில் இயங்கி வருகிறது. இந்த வழியாகத்தான் ஆர்ப்பாக்கம், புளிச்சக்காடு, கொப்பியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி - கல்லூரி மாணவ மாணவிகள் வந்து செல்கின்றனர்.

டாஸ்மாக் கடைக்கு வரும் மது அருந்துபவர்கள் மது அருந்திவிட்டு சாலையிலேயே அரை நிர்வாணமாக விழுந்து கிடப்பதால் பள்ளி கல்லூரி மாணவிகள், கோவிலுக்கு வரும் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் மது அருந்துபவர்கள் தனது இருசக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்வதால் அவ்வழியாக செல்லும் மினி பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்கள் பெரும் சிரமம் அடைகின்றனர். மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்க விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

உடனடியாக பொதுமக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி அரசு மதுபான கடையினை அகற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது மேலும் இது குறித்து நாம் தமிழர் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் சாகுல் ஆமிது, தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் புத்திரகொண்டான் ஆகியோர் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Tags:    

Similar News