உள்ளூர் செய்திகள்

கிரேன் மூலம் 15 அடி உயர மாலையை எடுத்து சென்றதையும், மாட்டு வண்டியில் எடுத்துச் சென்ற சீர்வரிசை பொருட்களையும் படத்தில் காணலாம்.

காதணி விழாவுக்காக கிரேன் மூலம் 15 அடி உயர மாலை எடுத்து சென்ற தாய்மாமன்

Published On 2023-07-24 02:20 GMT   |   Update On 2023-07-24 02:20 GMT
  • சுமார் 1 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக சென்றார்.
  • பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

வந்தவாசி :

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த புன்னை கிராமத்தை சேர்ந்தவர் சாமி அய்யப்பன். இவரது அக்காள், கணவருடன் சென்னையில் வசித்து வருகின்றனர். அக்காளின் குழந்தைகள் 3 பேருக்கு காதணி விழா வந்தவாசியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

இதையடுத்து சாமி அய்யப்பன் தனது அக்காள் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர்வரிசையை வித்தியாசமாக செய்ய முடிவு செய்தார். அதன்படி தாய்மாமன் சீர் கொண்டு செல்வதற்கு 15 அடி உயரத்தில் மாலை ஒன்று தயார் செய்து கிரேன் மூலம் ஊர்வலமாக எடுத்துச் சென்றார். வந்தவாசி ஈஸ்வரன் கோவிலில் இருந்து திருமண மண்டபம் வரை சுமார் 1 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக சென்றார்.

மேலும் பின்னால் மேளதாளங்களுடன் டிராக்டர் டிரெய்லரில் 3 குழந்தைகளை அமர வைத்து 100-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான சீர்வரிசைகள் கொண்டு ஊர்வலமாக சென்றனர்.

கிரேன் மூலம் எடுத்துச் சென்ற மாலையை சாலையில் செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். இந்த சம்பவம் வந்தவாசி பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News