உள்ளூர் செய்திகள்
உடுமலை நவநீதகிருஷ்ணன் கோவிலில் தெப்ப உற்சவம்
- வைகுண்ட நாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- பக்தர்கள் விரதமிருந்து தாசர்களுக்கு படி அரிசி, காய்கறிகள் அளித்து வழிபட்டனர்.
உடுமலை :
உடுமலை பெரிய கடைவீதியில் உள்ள 400 ஆண்டு பழமையான ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு ஸ்ரீ பூமி நிலா நாயகி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் தெப்ப உற்சவம், வைகுண்ட நாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவிலில் ஆண்கள் பாட்டுப்பாடி கோவிலை சுற்றி வந்தார்கள்.
கோவிலில் நவநீதகிருஷ்ணன் பெருமாளுக்கு பால், தயிர், நெய், இளநீர் என பல்வேறு திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சீனிவாச பெருமாள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. மேலும் உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள அனைத்துபெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.பக்தர்கள் விரதமிருந்து தாசர்களுக்கு படி அரிசி, காய்கறிகள் அளித்து வழிபட்டனர்.