உள்ளூர் செய்திகள்
உடுமலை ஜிவிஜி. விசாலாட்சி கல்லூரி சார்பில் என்.எஸ்.எஸ். முகாம்
- குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு பேரணி ,கோவில் உழவார பணி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது.
- மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட குழு மாணவிகள் மற்றும் அலுவலர் பிரியா, துணை திட்ட அலுவலர்கள்மாலினி ,மகாலட்சுமி கலந்து கொண்டனர்.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய சுற்றுவட்டார பகுதியில் ஸ்ரீ ஜிவிஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.ஜெ.என்.பாளையத்தில்குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு பேரணி ,கோவில் உழவார பணி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது.
இதில் ஜே.என் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் ,துணைத் தலைவர் முருகானந்தம் கலந்து கொண்டனர். ஸ்ரீ ஜிவிஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட குழு மாணவிகள் மற்றும் அலுவலர் பிரியா, துணை திட்ட அலுவலர்கள்மாலினி ,மகாலட்சுமி கலந்து கொண்டனர்.