உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்: தி.மு.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

Published On 2023-09-21 15:41 IST   |   Update On 2023-09-21 15:41:00 IST
  • கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது .
  • அணிகளின் அமைப்பா ளர்கள் இளைஞர்களை , பெரும் திரளாக பங்கெடுக்க செய்ய வேண்டும் அணிகளின் அமைப்பா ளர்கள் இளைஞர்களை , பெரும் திரளாக பங்கெடுக்க செய்ய வேண்டும்

தருமபுரி, 

தருமபுரி மாவட்டத்தில் வருகிற 26-ம் தேதி இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது .

இந்நிகழ்ச்சிக்கு கழக இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இதனை அடுத்து தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் கிழக்கு மாவட்டசெயற்குழு கூட்டம் துணை செயலாளர் உமாசங்கர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி கலந்து கொண்டு நிகழ்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். மேலும் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரியும் மாநில இளைஞர் அணி செயலாளருக்கு மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

மேலும் விழாவிற்கு மாவட்டத்தில் உள்ள அணிகளின் அமைப்பா ளர்கள் இளைஞர்களையும், மாணவர்களையும், மகளிரையும் பெரும் திரளாக பங்கெடுக்க செய்ய வேண்டும் என்றும், அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் கலைஞரின் நூலகம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.ஜி.சேகர், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம், ரேணுகாதேவி, மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன், இளைஞர் அணி அமைப்பாளர் வெங்கடேஸ்வரன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கௌதம் , ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News