உள்ளூர் செய்திகள்

கைதான 2 பேர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களுடன் போலீசார்.

சேலம் வழியாக சென்ற ரெயிலில் 9 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது ஒடிசாவை சேர்ந்தவர்கள்

Published On 2022-06-27 07:45 GMT   |   Update On 2022-06-27 07:45 GMT
  • சேலம் வழியாக சென்ற ரெயிலில் 9 கிலோ கஞ்சாவுடன் ஒடிசாவை சேர்ந்தவர்கள் 2 பேர் கைது செய்தனர்.
  • கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

சேலம்:

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அசோகன், சக்திவேல், ஸ்ரீநாத் ஆகியோர் இன்று காலை ரெயிலில் சோதனை செய்தனர்.

அப்போது எஸ்.7 பெட்டி கழிவறை அருகே கிடந்த பேக்கில் 9 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அந்த பையை ஒடிசாவை சேர்ந்த கவுங்கா மாலிக் (வயது 22), ராணா (22 ஆகியோர் கொண்டு வந்தது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் திருப்பூரில் உள்ள செங்கப்பள்ளி என்ற ஊரில் தனியார் குளிர்பான கம்பெனியில் கடந்த 3 மாதங்களாக வேலை செய்து வருவதாகவும் கடந்த 21- தேதி திருப்பூரிலிருந்து ஊருக்கு சென்று விட்டு தங்களது சொந்த ஊருக்கு சென்று அருகில் உள்ள கெந்தகூடா என்ற ஊரில் 1 கிலோ கஞ்சா ரூ.3,500 என்ற விலையில் சுமார் 9 கிலோ வாங்கியதாகவும் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் பாலாங்கீர் என்ற ஊரில் இருந்து திருப்பூருக்கு சென்று தாங்களே சிறு சிறு பொட்டலமாக கட்டி 200-க்கு விற்பனை செய்ய திட்டமிட்டதாகவும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News