உள்ளூர் செய்திகள்

இரு தரப்பினர் மோதல்: 8 பேர் மீது வழக்கு

Published On 2023-09-26 16:04 IST   |   Update On 2023-09-26 16:04:00 IST
  • ஊத்தங்கரையில் இரு தரப்பினர் இரு தரப்பினர் மோதி கொண்ட சம்பவத்தில் 8 பேர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
  • முன் விரோதம் காரணமாக மோதல்

ஊத்தங்கரை அருகே உள்ள ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 39). அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (55). இவர்களுக்குள் நில பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில், இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர்.

அது குறித்து கஸ்தூரி ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ஆறுமுகம், ராமு (28), அருள் (26), வெங்கடாசலம் (24) ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதே போல ஆறுமுகம் கொடுத்த மற்றொரு புகாரின் பேரில் கண்ணன் (60), ராணி (55), கோவிந்தன் (53), வெங்கடாசலம் (50) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News