உள்ளூர் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய 2 பேர் கைது
- ஓசூரில் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
- போலீசார் நடவடிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நெசவாளர் தெருவை சேர்ந்தவர் விஜய குமார் (31).கூலி தொழிலாளி. இவர் கடந்த 29-ம் ேததி இரவு வீட்டை பூட்டிவிட்டு தங்கை வீட்டு கிரகபிரவேச நிகழ்ச்சிக்காக மைசூர் சென்றிருந்தார்.இதற்கு அடுத்த நாள் வந்து பார்த்த போது வீடு திறக்கபட்ட நிலையில் இருந்தது. அப்போது பீரோவில் இருந்த 2 கிராம் கம்மல், ரூ.10 ஆயிரம் பணத்தை திருடிகொண்டு மர்ம நபர்கள் சென்றுள்ளது தெரிய வந்தது. இது குறித்து விஜய குமார் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கர்நாடகா மாநிலம் தும்கூர் பகுதியை சேர்ந்த ஜகனாதன் (32), சிக்கபல்லத்தூர் பகுதியை சேர்ந்த உமாசங்கர் (35) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.