அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மஞ்சள்.
அரூர் கூட்டுறவு சங்கத்தில் மஞ்சள் ரூ.52 லட்சத்திற்கு ஏலம் போனது
- இந்த விற்பனை சங்கத்தில் நேற்று முதல் நாளில் ரூ. 52 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது.
- மஞ்சள் விரலி ரூ.11,689 முதல் 16,702 வரையும், குண்டு(கிழங்கு) மஞ்சள் குவிண்டால் ரூ. 10,309 முதல் 13,069 வரையிலும் விற்பனையானது.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூரில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் மஞ்சள், பருத்தி ஆகியவை ஏலம் விடப்படுகிறது.
உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் விளை பொருட்களை மொத்த வியாபாரிகள், மில் உரிமையாளர்கள் என பெரிய அளவிலான வியாபாரிகள் வந்து வாங்குவதால் விலை அதிகம் கிடைக்கிறது.
அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளிலிருந்து 223 விவசாயிகள் 800 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதனை சேலம், ஈரோடு, கோவை பகுதிகளிலிருந்து வந்த வியாபாரிகள் ஏலம் எடுத்தனர். இந்த விற்பனை சங்கத்தில் நேற்று முதல் நாளில் ரூ. 52 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது.
மஞ்சள் விரலி ரூ.11,689 முதல் 16,702 வரையும், குண்டு(கிழங்கு) மஞ்சள் குவிண்டால் ரூ. 10,309 முதல் 13,069 வரையிலும் விற்பனையானது.