உள்ளூர் செய்திகள்

அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த லாரிகள்.

நிலக்கோட்டை சார்நிலைய கருவூலத்தில் பாம்புகளின் இருப்பிடமாக மாறிய லாரிகள்

Published On 2023-08-14 12:12 IST   |   Update On 2023-08-14 12:12:00 IST
  • இந்த அலுவலகம் முன்பு பல ஆண்டுகளாக பழுதடைந்த லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது அப்படியே பாம்புகள் வசிக்கும் கூடாரமாக மாறிப் போய்விட்டது.
  • கடந்த 10 தினங்களுக்கு முன்பு பட்டப்பகலில் அலுவலகத்திற்குள் 2 பாம்புகள் வந்ததைப் பார்த்து அங்கு இருந்த பொதுமக்கள், அதிகாரிகள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக சார்நிலை கருவூலம் செயல்பட்டு வருகிறது. இந்த சார்நிலை கருவூல அலுவ லகம் அருகே மருதாநதி, மஞ்சளாறு உள்ளிட்ட ஆறுகளை கண்காணி ப்பதற்கான பொதுப்பணி த்துறை அலுவலகமும் உள்ளது.

இந்த அலுவலகம் முன்பு பல ஆண்டுகளாக பழுதடைந்த லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது அப்படியே பாம்புகள் வசிக்கும் கூடாரமாக மாறிப் போய்விட்டது.

கடந்த 10 தினங்களுக்கு முன்பு பட்டப்பகலில் அலுவலகத்திற்குள் 2 பாம்புகள் வந்ததைப் பார்த்து அங்கு இருந்த பொதுமக்கள், அதிகாரிகள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின்னர் நிலக்கோட்டை தீயணைப்புத்துறை வீரர்கள் வந்து பாம்பை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அங்கு லாரிகள் மற்றும் புதர்கள் இருந்ததால் கண்டு பிடிக்க முடியவில்லை.

இதனால் அதிகாரிகள் எந்த நேரமும் அச்சத்தில் பணி செய்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீ சார் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மிகுந்த அச்சத்தில் பணியாற்றி வருகின்றனர்.

எனவே லாரிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏலம் விட வேண்டும். இல்லையெனில் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொது மக்களும், அதிகாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News