உள்ளூர் செய்திகள்
திருவள்ளூரில் லாரி மோதி தொழிலாளி பலி
- ராஜன் நேற்று இரவு திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே சாலையை கடக்க முயன்றார்.
- திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி திடீரென ராஜன் மீது மோதியது.
திருவள்ளூர்:
திருவள்ளூர், ஜெயா நகர் பாரதி தெருவை சேர்ந்தவர் ராஜன் (வயது65). கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி திடீரென ராஜன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக பலியானார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவர் குறித்து விசாரித்து வருகிறார்கள்.