உள்ளூர் செய்திகள்

வடமாநில தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை பதிவு முகாமை முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் பார்வையிட்ட போது எடுத்த படம்.


திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை பதிவு முகாம் முதன்மை மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்

Published On 2023-06-26 11:28 IST   |   Update On 2023-06-26 11:28:00 IST
  • வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை
  • 4 பள்ளிகள்

  திருப்பூர்:

தேசிய, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்படி திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட காவல்துறை, தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை ஆகியவை சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான தகவல் சேகரிப்பு மற்றும் பதிவு முகாம் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி. மாநகராட்சி பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் நடைபெற்றது.

முகாமிற்கு திருப்பூர் முதன்ைம மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் தலைமை தாங்கி ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் முகாமை தொடங்கி வைத்தார். முகாமை மோட்டாா் வாகன இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், கூடுதல் சார்பு நீதிபதி மேகலா மைதிலி, கூடுதல் மகிளா நீதித்துறை நடுவர் கார்த்திகேயன், நீதித்துறை நடுவர் பழனிக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

முகாமில் பல்வேறு கல்லூரிகளை சோ்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தன்னார்வலர்களாக கலந்துகொண்டு வடமாநில தொழிலாளர்களிடம் ஆவணங்களை சேகரித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தொழில்துறை பாதுகாப்பு இயக்க இணை இயக்குனர் புகழேந்தி, துணை இயக்குனர்கள் ஜெயமுருகன், சந்தோஷ், உதவி இயக்குனர் சேதுபதி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையா் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் கலந்து கொண்டு அடையாள அட்டைக்கு பதிவு செய்ய ஆவணங்களை அளித்தனர்.

Tags:    

Similar News