விசுவ இந்து பரிசத் அமைப்பினர் சாலை மறியல்
- கொடியேந்தி ஊர்வலம் செல்ல தடை விதித்ததால் பரபரப்பு
- போலீசாருடன் வாக்குவாதம்
திருச்சி,
தைப்பூசத்தை முன்னிட்டு விசுவ இந்து பரிசத் அமைப் பினர் அகில இந்திய செயலாளர் சானுமலைஜி தலை–மையில் இன்று காவிரி படித்துறைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பால் குடம், காவடி, வேல் மற்றும் அனுமன் கொடியுடன் பாத யாத்திரை–யாக வயலூர் முருகன் கோவிலுக்கு புறப் பட்டனர்.அப்போது அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார். பின்னர் போலீசார் அவர்களிடம் கொடியேந்தி சொல்ல அனுமதிக்க இயலாது என கூறினர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு மற் றும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் தொடர்ந்து அம்மா மண்டபம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட் டது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் கொடிகள் இல்லாமல் பாதயாத்திரைக்கு செல்லவும், நடுவில் ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க வயலூர் வரை போலீசார் பாதுகாப்புக்கு வருவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அனைவரும் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.