உலக நெசவாளர் அமைப்பின் தமிழ்நாடு கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- உலக நெசவாளர் அமைப்பின் தமிழ்நாடு கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- திருச்சி புறநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி
உலக நெசவாளர் அமைப்பின் தமிழ்நாடு கிளை அமைப்பு ரீதியிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஸ்ரீரங்கம் ராமானுஜ கூட திருமண மஹாலில் நடந்தது. கூட்டத்தில் அமைப்பின் இணை நிறுவனர் ரமேஷ் முனுகுண்ட்ல கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு பத்மசாலியர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.என். தங்கராஜ், மாநில பொது செயலாளர் வெங்கடாசலபதி திருப்பூர் மாவட்ட தலைவர் முத்தழகர், பொறியாளர் வியாபார சங்க தலைவர் லோகநாதன், முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் நாகராஜன், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயலாளர் கஸ்தூரி, திருச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஷ், திருச்சி மாவட்ட மகளிரணி தலைவி மகாலட்சுமி, திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி வாசுதேவன், பாரதிய ஜனதா கட்சியின் நெசவாளர் பிரிவின் சார்பில் அரசு நேதாஜி, மாநில செயலாளர் சதீஷ் குமார், திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட சங்க நிர்வாகிகள், நெசவாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் சேதுபதி பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.