உள்ளூர் செய்திகள்

முக்குலத்தோர் சமூக அறக்கட்டளையின் தேவர் ஜெயந்தி விழாவில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்

Published On 2022-10-22 14:56 IST   |   Update On 2022-10-22 14:56:00 IST
  • திருச்சியில் முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடை பெற்றது.
  • குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருச்சி,

முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அனைத்து சமுதாய தலைவர்களுக்கு மாமன்னர் புலித்தேவன் விருது வழங்கும் விழா திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அருண் ஓட்டலில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

விழாவுக்கு முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார். திருச்சி மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரும், முன்னாள் பொது சுகாதாரக் குழு தலைவருமான டாக்டர் எஸ்.தமிழரசி சுப்பையா குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

விழாவில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி அனைத்து சமுதாய தலைவர்களுக்கும் புலித்தேவன் விருது வழங்கி பேசினார். அப்போது அமைச்சர் கூறும்போது, நீங்கள் (டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன், தமிழரசி சுப்பையா) தி.மு.க.வில் இணைந்து தொடர்ச்சியாக மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறீர்கள். உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என தெரியவில்லை. ஆனால் என்றைக்கும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பேன் என்றார்.

இந்த விழாவில் அமைச்சர் கே.என்.நேருவுக்கும் விழா குழு சார்பில் புலித்தேவன் விருதினை அறக்கட்டளை தலைவர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் வழங்கினார்.

திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் கலந்துகொண்டு தேவர் ஜெயந்தி மலரினை பெற்றார். விழாவில் தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் க.வைரமணி, எம்.எல்.ஏ.க்கள் காடுவெட்டி என்.தியாகராஜன், எஸ்.ஸ்டாலின் குமார், சவுந்தரபாண்டியன்,

எஸ்.கதிரவன், மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர்கள் முத்துசெல்வன், விஜயா ஜெயராஜ், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், கனகராஜ், கமல் முஸ்தபா, கே.எஸ்.நாகராஜ், கோட்டத் தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், பகுதிச் செயலாளர்கள் காஜாமலை விஜி, ராம்குமார், இளங்கோ,

ரோட்டேரியன் டாக்டர் கே.சீனிவாசன், சுமதி பப்ளிகேஷன் வசந்த குமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெ.கலைச்செல்வி, நாகராஜ், கலைச்செல்வி மற்றும் டோல்கேட் சுப்பிரமணியன், பா.ஜான் ராஜ்குமார் ஆகியோருக்கு புலித்தேவன் விருது வழங்கப்பட்டது. முடிவில் டாக்டர் எஸ். விஜய் கார்த்திக் சுப்பையா, எஸ். மருதுபாண்டி, கே.ஆர்.கே. ராஜா ஆகியோர் நன்றி கூறினர்.

Tags:    

Similar News