உள்ளூர் செய்திகள்

திருச்சி என்.ஐ.டி.யில் ஆன்லைன் எம்.டெக். படிப்பு அறிமுகம் - இயக்குனர் அகிலா தகவல்

Published On 2022-08-04 09:56 GMT   |   Update On 2022-08-04 09:56 GMT
  • தேசிய தரவரிசை கவுன்சில் வெளியிட்ட இந்திய தரவரிசை 2022 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியாவில் உள்ள அனைத்து என்.ஐ.டி.களில் திருச்சி முதலிடத்தை பிடித்துள்ளது.
  • கடந்த 3 ஆண்டுகளில் என்.ஐ.டி.யில் தகவல் தொழில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.20 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி :

இந்தியாவில் உள்ள என்.ஐ.டி.களில் முதல் இடத்தில் உள்ள திருச்சி என்.ஐ.டி.யின் 18-வது பட்டமளிப்பு விழா நாளை மறுநாள் (6-ந்தேதி, சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. கொரோனாவுக்கு பிறகு நடக்கும் நேரடி பட்டமளிப்பு விழாவில் 881 இளநிலை மற்றும் முதுநிலை உள்ளிட்ட ஆயிரத்து 975 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்ப்படவுள்ளது.

என்.ஐ.டி. குழுமதலைவர் பாகர்பட் தலைமையில் நடக்கும் விழாவில் பெடரல் வங்கி தலைமை செயல் அலுவலர் ஷியாம் சீனிவாசன் தலைமை தாங்குகிறார். இது தொடர்பாக திருச்சி என்.ஐ.டி. இயக்குனர் அகிலா கூறியதாவது:-

தேசிய தரவரிசை கவுன்சில் வெளியிட்ட இந்திய தரவரிசை 2022 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியாவில் உள்ள அனைத்து என்.ஐ.டி.களில் திருச்சி முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த இடத்தை தக்க வைத்துள்ளது. இந்த ஆண்டு முதல் புதிய கல்விக் கொள்கை வழிமுறைகளை அமல்படுத்தி வருகிறோம். நடப்பாண்டு முதல் ஆன்லைன் எம்.டெக். படிப்பு புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது. கணினி அறிவியல், எம்.சி.ஏ., பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் இந்த பிரிவில் சேர்ந்து படிக்கலாம்.

கடந்த 3 ஆண்டுகளில் என்.ஐ.டி.யில் தகவல் தொழில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.20 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது என்.ஐ.டி. பதிவாளர் தாமரைச்செல்வன், டீன் ரமேஷ் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் பக்தவச்சலம், ஒருங்கிணைப்பாளர் அசோகன், பேராசிரியர் சிவக்குமரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News