உள்ளூர் செய்திகள்

குறைகளை தெரிவிக்க திருச்சி மாநகராட்சி சார்பில் புதிய செயலி

Published On 2022-08-01 10:10 GMT   |   Update On 2022-08-01 10:10 GMT
  • வரி செலுத்தவும், குறைகள் குறித்த புகார்களை தெரிவிக்கவும் விரைவில் திருச்சி மாநகராட்சி சார்பில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது
  • இந்த செயலியில் மாநகராட்சி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களின் விவரங்கள் இடம் பெறும்

திருச்சி:

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் ஆன்லைன் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக புதிய மொபைல் செயலி ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இருக்கும் மொபைல் அப்ளிகேஷனை மாற்றிவிட்டு புதிதாக அறிமுகம் செய்ய உள்ளனர்.

இந்த செயலியில் மாநகராட்சி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களின் விவரங்கள் இடம் பெறும். இதில் மாநகர வாசிகள் முன்பதிவு செய்து தேவைகளை நிவர்த்தி செய்யலாம். அது மட்டும் அல்லாமல் புகார்கள் அளிக்கும் வசதி, வரி செலுத்துதல் போன்ற அம்சங்களும் இடம்பெறுகிறது.

மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான ஒரு இடத்தையும் ஒதுக்கியுள்ளனர். இந்த புதிய செயலிக்கு திருச்சி சிட்டிசன் ஆப் என பெயரிடப்பட்டுள்ளது. ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்குள் புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே உபயோகமாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவாது என்று சொல்லப்பட்டாலும் பெரும்பாலான மக்களிடம் ஸ்மார்ட் போன் வசதி இருப்பதால் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு செயலி மூலம் உதவ முடியும் என்கிறார்கள்.

Tags:    

Similar News