உள்ளூர் செய்திகள்

தமிழகம் போல வேறு எங்கும் புத்தகத் திருவிழா நடத்தப்படுவதில்லை - ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகர் பெருமிதம்

Published On 2022-09-19 07:39 GMT   |   Update On 2022-09-19 07:39 GMT
  • தமிழகம் போல வேறு எங்கும் புத்தகத் திருவிழா நடத்தப்படுவதில்லை என்று ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
  • கலெக்டர் பிரதீப்குமார் தலைமை வகித்தார்.

திருச்சி:

திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சிகள் கவின் கலைக்குழுவினரின் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கின. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரதீப்குமார் தலைமை வகித்தார்.

இதில் ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'இந்தியா எனும் மழைக்காடு' என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

வாசிப்பு பழக்கத்துக்கு தமிழகத்தில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவை போன்று வேறு எந்த மாநிலத்திலும் நடத்தப்படுவதில்லை. உலகம் வசிப்பதற்கு மட்டுமல்ல வாசிக்கவும் உள்ளது. புத்தகம் வைக்க இடம் இல்லாத வீடு முழுமையாக கட்டி முடிக்கப்படாத வீடு.

இந்தியா பன்முகத் தன்மை நாடா என்பதை அறிய வேண்டியது நிகழ்கால தேவையாக உள்ளது. இதற்கு விடைகாணும் விதமாக சங்க இலக்கியங்களில் கூறப்படும மானுடவியல் வாழ்க்கை உள்ளது.

சிந்துசமவெளி நாகரிக காலம் முடிகின்ற இடம் சங்க கால இலக்கியத்தின் தொடர்ச்சியாக உள்ளது. இந்தியா சங்க இலக்கியத்தில் கூறப்படும் மழைக்காடுகளை போன்றது. பல்வேறு அடுக்குகளைக் கொண்டு பல மொழிகள் பேசும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பாட்டை உணர்த்துகிறது என்றார். 

Tags:    

Similar News