உள்ளூர் செய்திகள்

அரிசி கடையில் திருட்டு

Published On 2022-11-08 15:14 IST   |   Update On 2022-11-08 15:14:00 IST
  • அரிசி கடையில் நடந்த ரூ.22 ஆயிரம் திருட்டப்பட்டது
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

திருச்சி

திருச்சி கம்பரசம்பேட்டை முஸ்லிம் தெரு பகுதியை சேர்ந்தவர் ஜாபர் சாதிக்( 38). இவர் கம்பரசன் பேட்டை பகுதியில் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம்போல் இரவு ஒன்பதரை மணியளவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 22,000 ரொக்கம் மற்றும் இரும்பு மேசை ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக ஜாபர் சாதிக் ஜீயபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News