உள்ளூர் செய்திகள்

பிச்சை எடுத்த பணத்தை கலெக்டரிடம் வழங்கிய முதியவர்

Published On 2023-02-06 09:08 GMT   |   Update On 2023-02-06 09:08 GMT
  • ஒரு வார கலெக்‌ஷன் 10 ஆயிரத்தை வழங்கினார்
  • இதுவரை 50 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளதாக பெருமிதம்

திருச்சி,

துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், ஆலங்கி ணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி(வயது 73). கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பாக தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, பிரிந்து வந்து யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். 1980ம் ஆண்டு முதல் தனக்கு யாசகமாக கிடைக்கும் பணத்தை நலிவடைந்த பள்ளி வளர்ச்சிக்கும், பள்ளி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வாங்குவதற்கும் நன்கொடை யாக கொடுத்து வந்துள்ளார்.கொரோனா கால கட்டத்திற்கு பின்னர் தனக்கு கிடைக்கும் யாகசக பணத்தை அரசு பொது நிவாரண நிதிக்கு அளித்து வருகிறார். இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பூல்பாண்டி, தனக்கு யாசகமாக கிடைத்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கலெக்டர் பிரதீப்குமாரை நேரில் சந்தித்து வழங்கினார்.இது குறித்து அவர் கூறும்போது....கடந்த ஒரு வார காலமாக மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் யாசகம் கேட்டு வந்தேன். ஒரு வார காலத்தில் எனக்கு கிடைத்த 10 ஆயிரம் ருபாய் பணத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் சேர்ப்பதற்காக கலெக்டரிடம் வழங்கி உள்ளேன். இது வரை யாசகமாக எனக்கு கிடைத்த 50 லட்சத்திற்கும் அதிகமான தொகையை வழங்கி உள்ளேன். ஒரு வார காலத்திற்குள் 10 ஆயிரம் ரூபாய் வசூலா என்று உங்களுக்கு ஆச்சர்யம் வரலாம். எனக்கு யாசகமாக கிடைக்கும் உணவு பண்டங்களை மட்டுமே உண்டு வாழ்ந்து வருகிறேன்.யாசகமாக பெறும் பணத்தை நான் என் சொந்த நலனிற்காக எடுப்பதே இல்லை. இதனை பொதுமக்கள் நன்கு அறிந்துள்ளதாலும், யாசகம் பெறும் தொகையினை நற்காரியங்களுக்காக அரசிடம் வழங்குவதாலும் எனக்கு அவர்களாகவே முன்வந்து யாசகம் அளிக்கின்றனர். இனி ஜுன் மாதம் வரை நான் யாசகம் எடுத்து கிடைக்கும் பணம் அனைத்தையும் பள்ளிகளுக்கு வழங்க உள்ளேன் என்று அவர் கூறினார், 

Tags:    

Similar News