உள்ளூர் செய்திகள்

புங்கனூர் அங்கன்வாடி கட்டிடம் மீது முறிந்து விழுந்த தென்னை மரம்

Published On 2022-12-09 09:42 GMT   |   Update On 2022-12-09 09:42 GMT
  • புங்கனூர் அங்கன்வாடி கட்டிடம் மீது தென்னை மரம் முறிந்து விழுந்தது
  • அங்கன்வாடியில் பயிலும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தப்பினர்.

திருச்சி

திருச்சி அருகே உள்ள புங்கனூர் கிராமத்தில் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் பஞ்சாயத்து அலுவலகம் அங்கன்வாடி கட்டிடம் ரேஷன் கடை மற்றும் பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கட்டிடங்களுக்கு மத்தியில் தென்னை மரங்கள் புளிய மரங்கள் இருக்கின்றன.

அவற்றில் ஒரு தென்னை மரம் மாண்டஸ் புயல் காரணமாக வீசிய பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் நேற்று இரவு அங்குள்ள அங்கன்வாடி கட்டிடத்தின் மீது முறிந்து விழுந்தது. இந்த கட்டிடம் ஒடுகளால் வேயப்பட்டது என்பதால் கட்டிடத்திற்கு பெரிய சேதம் ஏற்படவில்லை.

அத்துடன் மரத்திலிருந்த தேங்காய்கள் மற்றும் இளநீர்கள் தெறித்து அருகில் இருந்த பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் பால் சங்க கட்டிடங்களில் விழுந்துள்ளது. இரவில் விழுந்ததால் அங்கு பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் மற்றும் ரேசன் கடை, பால் சங்க கட்டிடத்திற்கு பால் வாங்க வரும் பொதுமக்கள், அங்கன்வாடியில் பயிலும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தப்பினர்.

மரம் முறிந்து விழுந்ததை அறிந்த புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் தாமோதரன் உடனடியாக அங்கு விரைந்து வந்து மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். மேலும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு உயிர் சேதத்தை ஏற்படுத்தும் பழுதடைந்த மரங்களை அப்புறப்படுத்த பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றி உடனடியாக அப்புறப்படுதவும் நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

Tags:    

Similar News