உள்ளூர் செய்திகள்

வேனில் ரேஷன் அரிசி கடத்தல்

Published On 2023-06-23 14:18 IST   |   Update On 2023-06-23 14:18:00 IST
  • திருச்சியில் முறைகேடாக கடத்தி வரப்பட்ட ரேசன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது
  • கடத்தல் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

திருச்சி,

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் காமினி உத்தரவின்பேரில் அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் ரமேஷ்கண்ணன், உதவி ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், திருச்சி கோட்டை பகுதியில் கரூர் சாலை, குடமுருட்டி பாலம் அருகே உள்ள சோதனை சாவடியின் அருகில், போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை (லோடு வேன்) நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் வந்த 3 பேர் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர்.அவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் திருச்சி, கீழரண்சாலை பகுதியைச் சேர்ந்த பெரியண்ணசாமி (30), முத்தரசநல்லூரை சேர்ந்த விஜய் (24), பாலசுப்பிரமணியன் (23) என்பதும், அவர்கள் முறைகேடாக 2,750 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது.இதனையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்து, அரசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News