உள்ளூர் செய்திகள்

வாலிபரை கண்மூடிதனமாக தாக்கிய எஸ்.ஐ., காவலர் பணியிட மாற்றம்

Published On 2023-08-09 08:36 GMT   |   Update On 2023-08-09 08:36 GMT
  • பாம்பாட்டிப்பட்டி வாலிபரை கண்மூடிதனமாக தாக்கிய எஸ்.ஐ., காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்
  • திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார் அதிரடி நடவடிக்கை

மணப்பாறை, 

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த முகவனூர் அருகே உள்ள பாம்பாட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 23). இவரின் தாத்தா மருதை என்பவர் அவரின் சகோதரியான பெரியக்காள் (85) என்பவரை பராமரிக்க முடியாமல் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டதாக கூறப்படுகின்றது.இதனால் ஆத்திரமடைந்த பேரன் பாஸ்கர் பாட்டியை எப்படி முதியோர் இல்லத்தில் சேர்த்தீர்கள் என கேட்டு மருதையிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.இதையடுத்து மருதை வையம்பட்டி போலீஸ் நிலையத்தில் பாஸ்கர் மீது புகார் அளித்தார். அதன்படி வையம்பட்டி போலீசார் பாஸ்கரிடம் விசாரித்து உள்ளனர். பின்னர் போலீஸ் நிலையத்தில் வைத்து சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார், காவலர் செந்தில்குமார் சேர்ந்து பாஸ்கரை சரமாரியதாக தாக்கியதாக தெரிகிறது.பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். மறு நாள் பாஸ்கர் வலி தாங்க முடியாமல் அவதிப்பட்டார். அப்போது வீட்டில் உள்ளவர்களிடம் சம்பவம் பற்றி கூறி உள்ளார்.பாஸ்கரின் தொடை பகுதியில் போலீசார் தாக்கியதில் ரத்த உறைந்து காப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.தாத்தா பேரன் தகராறில் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதில் வாலிபரின் காலில் ரத்தம் உறைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டபோலீசார் மீது உயர் அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார், காவலர் செந்தில்குமார் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து திருச்சி மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News