உள்ளூர் செய்திகள்

முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் - அங்கன்வாடி ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்

Published On 2022-07-09 14:50 IST   |   Update On 2022-07-09 14:50:00 IST
  • அங்கன்வாடி மற்றும் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும்
  • ஓய்வு பெறும் போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ. 10 லட்சம், உதவியாளர்களுக்கு ஐந்து லட்சம் பணப்பலன் வழங்க வேண்டும்.

திருச்சி:

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் திருச்சி மாவட்ட ஐந்தாவது மாநாடு இன்று திருச்சியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் மல்லிகா பேகம் தீர்மானம் வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி வரவேற்றார்.மாநில பொருளாளர் தேவமணி மாநாடு துவக்க உரை ஆற்றினார்.மாவட்ட செயலாளர் சித்ரா வேலை அறிக்கையும், மாவட்ட பொருளாளர் ராணி வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர்.

இதில் சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். ரங்கராஜன் ,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பால்பாண்டி, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டெய்சி, மாநில தலைவர் ரத்தினமாலா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த மாநாட்டில் அங்கன்வாடி மற்றும் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும். அது மட்டுமல்லாமல் முறையான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் அமல்படுத்த வேண்டும்.

ஓய்வு பெறும் போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ. 10 லட்சம், உதவியாளர்களுக்கு ஐந்து லட்சம் பணப்பலன் வழங்க வேண்டும்.

பத்து ஆண்டுகள் பணியாற்றிய அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

5 ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட செல்போன்கள் முற்றிலும் செயலிழந்து விட்டது. ஆகவே உடனடியாக புதிய செல்போன்கள் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News