உள்ளூர் செய்திகள்

திருச்சி- புதுக்கோட்டை சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

Published On 2022-12-22 13:34 IST   |   Update On 2022-12-22 13:34:00 IST
  • திருச்சி- புதுக்கோட்டை சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து

திருச்சி:

திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர வடிகால் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்ட போது சில இடங்களில் குடிநீர் குழாய் உடைந்ததால், சுப்ரமணியபுரம் முதல் ஏர்போர்ட் வரையில் குடிநீர் வரவில்லை. இதனால் திருச்சி மாநகராட்சி 47 வது வார்டில் மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் சுப்பிரமணியம்புரம் மெயின்ரோட்டில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,மாநகராட்சி அதிகாரிகளுக்கும்-நெடுஞ்சாலை துறையினருக்கும் உரிய புரிதல் இல்லாமலேயே உள்ளதால் அடிக்கடி சாலை ஓரத்தில் பள்ளம் தோன்றுகிறேன் என்று குடிநீர் குழாய்களை நெடுஞ்சாலை துறையினர் உடைத்து விடுகின்றனர். இதனால் எங்கள் பகுதியில் கடந்த 6 மாத காலமாகவே டேங்கர் லாரி மூலமாக தண்ணீர் சப்ளை செய்யும் நிலை உள்ளது. நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.இதனை அறிந்த காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News