உள்ளூர் செய்திகள்
முசிறி சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ விழா
- முசிறி சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது.
- சந்திரமௌலீஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
முசிறி:
முசிறியில் பிரதோஷத்தை முன்னிட்டு சந்திரமௌலீஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை சர்வ சாதக மாணிக்க சுந்தர சிவாச்சாரியார் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். இதனைப் போன்று திருச்சி ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அண்ணாமலையார் கோயிலில் உள்ள அண்ணாமலையார் மற்றும் நந்தி பகவானுக்கும் அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது.