உள்ளூர் செய்திகள்

முசிறி - சிவாலயத்தில் 108 சங்கு பூஜை

Published On 2023-11-22 12:14 IST   |   Update On 2023-11-22 12:14:00 IST
  • முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவாலயம் அமைந்துள்ளது. .
  • இங்கு திருக்காமேஸ்வரர் உடனுறை சிவகாமசுந்தரி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

முசிறி

முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவாலயம் அமைந்துள்ளது. இங்கு திருக்காமேஸ்வரர் உடனுறை சிவகாமசுந்தரி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகளை நடைபெற்றது.

அப்போது சிவாச்சாரியார்கள் கோயில் வளாகத்தில் உள்ள யாக வேள்வி மண்டபத்தில் 108 சங்குகள் வைத்து அதில் புனித நீர் ஊற்றி சிறப்பு யாக வேள்வி நடத்தினர். விவசாயம் செழிக்கவும், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்யவும் காவிரியில் வற்றாது நீர் வரவும், மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும், உலக மக்கள் அமைதியாகவும் நோய் தாக்குதல்கள் இல்லாமலும் வாழ்ந்திட பிரார்த்தனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து புனித நீர் நிரப்பிய சங்குகளில் இருந்த நீர் மூலம் திருக்காமேஸ்வரர் மற்றும் சிவகாமசுந்தரி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பிரகார தெய்வங்களுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் சுவாமியை வழிபாடு செய்தனர்.

Tags:    

Similar News