கந்தர்வக்கோட்டையில் மக்களைத் தேடி மருத்துவ முகாம்
- குளத்தூர் நாயக்கர் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களைத் தேடி மருத்துவம் முகாம் நடைபெற்றது.
- மருத்துவ முகாமில் 927 நபர்கள் கலந்து கொண்டு உரிய பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சையும், ஆலோசனைகளும் பெற்று சென்றனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் குளத்தூர் நாயக்கர் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் முகாம் நடைபெற்றது.
முகாமை கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். முகாமில் புதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி மணிமாறன் தலைமையில் மருத்துவர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.
முகாமில் கந்தர்வகோட்டை ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திக் மழவராய ர், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் ஐயா, குளத்தூர் நாயக்கர் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி ராணி மகாலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர் வைரக்கண்ணு, மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மருத்துவ முகாமில் 927 நபர்கள் கலந்து கொண்டு உரிய பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சையும், ஆலோசனைகளும் பெற்று சென்றனர்.