தொட்டியத்தில் இலக்கிய சந்திப்பு கூட்டம்
- தொட்டியம் தமிழ் பேரவையின் இலக்கிய சந்திப்பு கூட்டமும் பாராட்டு விழாவும் நடந்தது.
- கூட்டத்தில் இலக்கியப் பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது
திருச்சி :
தொட்டியம் தமிழ் பேரவையின் இலக்கிய சந்திப்பு கூட்டமும் பாராட்டு விழாவும் நடந்தது. விழாவிற்கு தமிழ் பேரவை தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.
தமிழ் பேரவை செயலாளரும் உடையாகுளம் புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருமான சண்முகம் வரவேற்று, இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் குறித்து பேசினார். முன்னாள் தலைவர்கள் கவிஞர் மருதை வழக்கறிஞர் சேகர் துணைத் தலைவர் ரமேஷ் துணைச் செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆன்மீகம் குறித்து ஆசிரியர் ரவீந்திரன் பேசினார். பல்வேறு தலைப்புகளில் பள்ளி மாணவ மாணவிகள் பேசினர். தமிழ் பணியை பாராட்டி டாக்டர் பட்டம் பெற்ற தமிழ்ப் பேரவை அமைப்பாளர் தமிழ் ஆசிரியர் இரா. சுப்பிரமணியன் தொட்டியம் தமிழ்ப் பேரவை சார்பில் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
தலைமையாசிரியர் பிரேம்குமார் முன்னாள் தமிழ் பேரவை தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். டாக்டர் பட்டம் பெற்ற சுப்ரமணியன் ஏற்புரை வழங்கினார்.
கூட்டத்தில் இலக்கியப் பேச்சாளர் நெல்லை கண்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.முடிவில் தமிழ்ப் பேரவை பொருளாளர் செல்வமதி நன்றி கூறினார்.