உள்ளூர் செய்திகள்
- மணிகண்டத்தில் சிறுமி கடத்தப்பட்டார என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார்
திருச்சி:
திருச்சி அருகே உள்ள மணிகண்டம் காந்திநகர் முல்லை தெருவை சேர்ந்தவர் முனியப்பன். இவர் வீட்டிலேயே ஊதுபத்தி தயாரித்து சுற்றுப்பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு 3 பெண் குழந்தைகளும், 3 ஆண் குழந்தைகளும் உள்ளன. இவருடைய மனைவி ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்நிலையில் இவருடைய கடைசி 14 வயது மகள் வீட்டிலிருந்து திடீரென மாயமானார்.
அக்கம் பக்கம், உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால் மணிகண்டம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சிறுமி தானாக வீட்டை விட்டு சென்றாரா அல்லது யாரேனும் கடத்திச் சென்றனரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.