நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கம் கண்டனம்
- நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது
- மாநில பொதுச்செயலாளர் கைது
திருச்சி:
திருச்சி மாவட்ட தமிழ்நாடு நுகர் பொருள் வினியோகஸ்தர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் கவுரவ தலைவர் உஸ்மான்அலி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் அகரம் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட துணைத்த லைவர்கள் ராம்குமார், நாகராஜ், மாவட்டச் செயலாளர் அண்ணா துரை, துணை செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், திருச்சியில் இருபாலர் மதுக்கூட கேளிக்கை விடுதி நடத்த அனுமதி அளித்ததை கண்டித்து, போராட்டம் நடத்திய தமிழ்நாடு நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜசேகரன் மீது பொய்வழக்கு போட்டு, அவரை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை நீதிமன்ற காவலில் இருந்து விரைவில் விடுதலை செய்ய அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.