துவரங்குறிச்சியில் 9-ம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம்?
- போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- விசாரணையில் 9-ம் வகுப்பு மாணவிக்கும், மருங்காபுரி தெற்கு எல்லை காட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னன் என்ற வாலிபருக்கும் காதல் மலர்ந்தது தெரிய வந்தது.
திருச்சி:
திருச்சி மருங்காபுரி பகுதியைச் சேர்ந்தவர் காமாட்சி (வயது 36). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது 9-ம் வகுப்பு படிக்கும் மகளை நேற்று முன்தினம் முதல் காணவில்லை என துவரங்குறிச்சி போலீசில் புகார் செய்துள்ளார். அதில், அருகாமையில் உள்ள பெட்டி கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை என கூறியுள்ளார்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் மாயமான 9-ம் வகுப்பு மாணவிக்கும், மருங்காபுரி தெற்கு எல்லை காட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னன் (வயது 22) என்ற வாலிபருக்கும் காதல் மலர்ந்தது தெரிய வந்தது. இதனால் பொன்னனுடன் மாணவி ஓட்டம் பிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். காதல் வலையில் சிக்கிய 9-ம் வகுப்பு மாணவி காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.