உள்ளூர் செய்திகள்

இளந்தளிர் தொண்டு நிறுவனத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

Published On 2022-12-19 09:29 GMT   |   Update On 2022-12-19 09:29 GMT
  • இளந்தளிர் தொண்டு நிறுவனத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது.
  • 25-வது வெள்ளிவிழா ஆண்டு

திருச்சி :

திருச்சி இளந்தளிர் தொண்டு நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாக ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து அவர்களின் வாழ்க்கை வளம் பெற பல்வேறு நிலைகளில் சேவை புரிந்து வருகிறது. இளந்தளிர் அறக்கட்டளை வெள்ளிவிழா ஆண்டின் சிறப்பம்சமாக கிறிஸ்துமஸ் விழா திருச்சி மொராய்ஸ் சிட்டி உள் அரங்கத்தில் நடைபெற்றது.

சென்னை உயர்நீதி மன்ற ஓய்வு நீதிபதியும், தற்போதைய நான்காவது போலீஸ் கமிஷனின் தலைவருமான சி.டி.செல்வம், திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ், திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி ஆகியோரின் தலைமை தாங்கினர்.

எச்சல் குரூப் நிறுவனங்களின் தலைவர் முருகானந்தம், கிரடாய் அமைப்பின் தலைவர் ஆனந்த், ஹக்கீம் பிரியாணி உரிமையாளர் ஹக்கீம், ஜோஸ் ஆலுகாஸ் மேலாளர் லாசன் சான்டி, ஸ்ரீதைலா சில்க்ஸ் உரிமையாளர் கணபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

புனித ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளி தாளாளர் டி.யூஜின் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் 600-க்கும் மேற்பட்ட இளந்தளிர் குழந்தைகளும், தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர். நன்கொடையாளர்கள் குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் புத்தாடை வழங்கினர். அனைவருக்கும் ஹக்கீம் பிரியாணி உரிமையாளரால் உணவு வழங்கப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், மாணவர்களின் கல்விக்கு உதவுகின்ற இளந்தளிர் தொண்டு நிறுவனத்தை வாழ்த்தினர். மேலும் இதுபோன்ற தொண்டு நிறுவனங்கள் தங்கள் சமுதாயப் பணியை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல மொராய்ஸ் சிட்டி, ஜோஸ் ஆலுக்காஸ், ஸ்ரீ தைலா சில்க்ஸ், ஹக்கீம் பிரியாணி போன்ற வணிக அமைப்புகள் உதவ முன்வந்தது போல பொதுமக்களும், ஏனைய அமைப்புகளும் இதுபோன்ற தொண்டு நிறுவனங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

முன்னதாக இளந்தளிர் தொண்டு நிறுவன இயக்குனர் ஏ.சூசை அலங்காரம் வரவேற்றார். திருச்சி கலை காவிரி நுண்க்கலை கல்லூரியின் சார்பில் அன்பின் அலைகள் என்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. 

Tags:    

Similar News