உள்ளூர் செய்திகள்

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் மக்களை தேடி மார்பக பரிசோதனை வாகனம் இயக்கம்

Published On 2022-10-01 15:24 IST   |   Update On 2022-10-01 15:24:00 IST
  • திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் மக்களை தேடி மார்பக பரிசோதனை வாகனம் இயக்கம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
  • இந்த வாகனத்தில் பொதுமக்களுக்கு ரூ.3,000 கட்டணத்திலான மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மிகக்குறைந்த சலுகை கட்டணமாக ரூ.500-க்கு மேற்கொள்ளப்படுகிறது.

திருச்சி :

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் திருச்சி மலைக்கோட்டையை சுற்றி இளஞ்சிவப்பு நிறத்தில் விளக்குகளை எரிய விட்டு புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் போன்று மக்களை தேடி மார்பக புற்றுநோய் பரிசோதனை என்ற செயல் திட்டத்தில் தெர்மோகிராம் எந்திரத்துடன் ஒரு சிறப்பு மருத்துவ குழுவினை பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அனுப்பும் நிகழ்வு இன்று ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்தது.

இதனை நாகமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவர் வெள்ளைச்சாமி, ஹர்ஷமித்ரா செயல் இயக்குனர் டாக்டர் சசிப்பிரியா கோவிந்தராஜ், நிர்வாக இயக்குனர் டாக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த வாகனத்தில் பொதுமக்களுக்கு ரூ.3,000 கட்டணத்திலான மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை மிகக்குறைந்த சலுகை கட்டணமாக ரூ.500-க்கு மேற்கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News