உள்ளூர் செய்திகள்

மெமோகிராம் பரிசோதனை முகாம் நிறைவு நாளையொட்டி மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

Published On 2022-08-04 09:50 GMT   |   Update On 2022-08-04 09:50 GMT
  • தினசரி 25 பெண்களுக்கு மெமோகிராம் பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நேற்றைய தினம் வரை மூன்று நாட்களில் 78 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
  • முகாம் கடைசி நாளான இன்று மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

திருச்சி :

திருச்சி மலைக்கோட்டை இன்னர் வீல் சங்கம் மற்றும் தென்னூர் இந்து மிஷன் ஆஸ்பத்திரி இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் கண்டறியும் மெகா மெமோகிராம் பரிசோதனை முகாம் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் தினசரி 25 பெண்களுக்கு மெமோகிராம் பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நேற்றைய தினம் வரை மூன்று நாட்களில் 78 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. முகாம் கடைசி நாளான இன்று மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு இன்னர் வீல் சங்கங்களின் மாவட்ட தலைவர் சூரிய பிரபா ராஜசேகரன் தலைமை தாங்கினார். இதில் தங்கமயில் ஜூவல்லரியின் முதன்மை இயக்க அதிகாரி விஷ்வ நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்து பேசினார். இந்து மிஷன் மருத்துவமனையின் நிர்வாகி சுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மலைக்கோட்டை இன்னர் வீல் சங்கத்தின் தலைவி கவிதா நாகராஜன் பேரணி ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் அந்த சங்கத்தின் நிர்வாகிகள் மீனா சுரேஷ், ஆண்ரூஸ் சேகர், உமா சந்தோஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Tags:    

Similar News