உள்ளூர் செய்திகள்

ஜீயபுரத்தில் திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு இளம் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை

Published On 2023-04-28 07:06 GMT   |   Update On 2023-04-28 07:06 GMT
  • ஜீயபுரத்தில் திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தினர்
  • போலீசார் கணவர், மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி:

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள துடையூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கும் நதியா (வயது 33) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு ஒரு மகன்,ஒரு மகள் உள்ளனர். நதியாவின் திருமணத்தின் போது அவரது பெற்றோர் நகை, பணம் மற்றும் சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்தனர்.இந்த நிலையில் சமீபகாலமாக மீண்டும் கூடுதலாக வரதட்சணை கேட்டு அவரை கணவர் பாலாஜி, மாமியார் லட்சுமி அம்மாள், கணவரின் சகோதரர் சசி என்கிற மருதமுத்து, அவரது மனைவி ரேவதி ஆகியோர் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

தனது பெற்றோர் மிகவும் சிரமத்தில் இருப்பதால் தன்னால் வரதட்சணை வாங்கி வரமுடியாது என்று நதியா திட்டவட்டாக கூறியுள்ளார்.ஆனாலும் கணவர் குடும்பத்தினர் நதியாவை தொடர்ந்து பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கி வந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட நதியா ஜீயபுரம்அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கணவர், மாமியார் உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News