உள்ளூர் செய்திகள்

திருச்சியில் இன்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மீண்டும் ஆலோசனை

Update: 2022-06-30 09:51 GMT
  • திருச்சியில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்கும் அ.தி.மு.க. நிர்வாகிகள் இரண்டாவது முறையாக ஆலோசனை கூட்டம் நடத்தினர்
  • இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியால் மட்டுமே அ.தி.மு.க.வையும், தமிழக மக்களையும் காப்பாற்ற முடியும் என்பதை மக்களிடம் எடுத்துச் செல்லுமாறு நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்

திருச்சி:

ஒற்றை தலைமை விவகாரத்தால் அ.தி.மு.க. பிளவுப்பட்டு நிற்கிறது. இதனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆதரவாளர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்ய முடிவு செய்து இருந்தனர். நீதிமன்றம் தடை விதித்த காரணத்தால் அந்தத் திட்டம் வருகிற 11-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த களேபரத்தில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெல்லமண்டி நடராஜன் இரட்டை தலைமையில் உறுதியாக நிற்பதால் மாநகர் மாவட்ட எடப்பாடி ஆதரவாளர்கள் தனியாக செயல்பட தொடங்கியுள்ளனர்.

இரு தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களை ஒன்று திரட்டும் வகையில் மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளரும், ஆவின் சேர்மனுமான கார்த்திகேயன் ஏற்பாட்டில் புதிய கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக பாலக்கரை பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஏற்பாட்டில் மாநகர மாவட்ட அவைத்தலைவர் ஐயப்பன் தலைமையில் நடந்தது.

இதில் கட்சியின் அமைப்பு செயலாளர் ரத்தினவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியால் மட்டுமே அ.தி.மு.க.வையும், தமிழக மக்களையும் காப்பாற்ற முடியும் என்பதை மக்களிடம் எடுத்துச் செல்லுமாறு நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம், மாவட்ட துணைச்செயலாளர் வனிதா, மாவட்ட அணி நிர்வாகிகள் கருமண்டபம் நடராஜன், தென்னூர் அப்பாஸ், அழகரசன் விஜய், பகுதி செயலாளர்கள் வெல்லமண்டி சண்முகம்,

நாகநாதர் பாண்டி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, சுரேஷ்குப்தா, என்.எஸ்.பூபதி, பொதுக்குழு உறுப்பினர்கள் வெல்லமண்டி பெருமாள், மல்லிகா செல்வராஜ், பாலக்கரை சதர்,

தலைமை கழக பேச்சாளர் ஆரி, வட்டச் செயலாளர்கள் எடத்தெரு பாபு, என்.டி.மலையப்பன், மகாலட்சுமி மலையப்பன், பேரவை துணைத் தலைவர் ராஜசேகர், புங்கனூர் கார்த்தி, சையது ரபீ, ஒத்தக்கடை மணிகண்டன், காஜாபேட்டை சரவணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News