உள்ளூர் செய்திகள்

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியிடம் அ.தி.மு.க. பிரமுகர் ரூ. 20 லட்சம் மோசடி

Published On 2022-09-22 15:07 IST   |   Update On 2022-09-22 15:07:00 IST
  • சுந்தரராஜ் (வயது 74). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. இவர் தனது மகனுக்கு அரசு வேலையை எதிர்பார்த்து இருந்தனர்
  • இதை தெரிந்து கொண்ட துறையூர் பச்சை பெருமாள்பட்டி குடில் ரோடு பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சிவா என்கிற சிவப்பிரகாசம் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுந்தரராஜை 2016 ஆண்டில் சந்தித்தார்.

திருச்சி,

துறையூர் சோபனாபுரம் ஈ.வி.ஆர். தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் (வயது 74). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. இவருக்கு மாதவன் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அரசு வேலையை எதிர்பார்த்து இருந்தனர். இதை மோப்பம் பிடித்த துறையூர் பச்சை பெருமாள்பட்டி குடில் ரோடு பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சிவா என்கிற சிவப்பிரகாசம் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுந்தரராஜை 2016 ஆண்டில் சந்தித்தார்.

பின்னர் அவரிடம் பணம் கொடுத்தால் உங்கள் மகனுக்கும், மகளுக்கும் வேலை ரெடியாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். அப்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுங்கட்சி பிரபலங்களுடன் சிவா என்கிற சிவப்பிரகாசம் தொடர்பில் இருந்தார்.

இதனால் அவரை நம்பிய சுந்தரராஜ் தனது மகன் மாதவன் மற்றும் மகளுக்கு வேலை வாங்குவதற்காக முதற்கட்டமாக ரூ.7 லட்சத்து 50 ஆயிரமும், பின்னர் பல்வேறு தவணையாக ரூ.12 லட்சத்து 50 ஆயிரமும் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து சிவப்பிரகாசம் மாதவனுக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கு பணி நியமன ஆணையினை வழங்கியதாக தெரிகிறது. பின்னர் அது போலி பணி ஆணை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து சுந்தரராஜ் துறையூர் போலீசில் தற்போது புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து போலீசார் கூறும்போது, புகார்தாரர் 2016 ஏப்ரல் 9-ந்தேதி பணம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால் 7 வருடத்திற்கு பின்பு இப்போதுதான் புகார் அளித்துள்ளார். சிவப்பிரகாசத்திடம் விசாரித்த போது பணத்தை திருப்பி கொடுத்ததாகவும், போலி பணி நியமன ஆணை எதுவும் வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னர் தான் உண்மை தெரியும் என்றனர்.

Tags:    

Similar News