காவேரிப்பட்டினத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
- மரக்கன்றுகளை நட்டு மழை பொழிய வேண்டிய அவசியத்தை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் பேரூராட்சித் தலைவர் அம்சவேணி செந்தில் குமார் 100 மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பேரூராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இதனையொட்டி தமிழக அரசு தண்ணீர் தினம் குறித்து நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தண்ணீரை மக்கள் சிக்கனமாக பயன்படுத்தவும், தண்ணீர் மாசு ஏற்படாத வகையில் பாதுகாக்கவும் , தண்ணீரை சேமிப்பினை மேம்படுத்தவும், அனைத்து ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்திட வேண்டும்.
மேலும் மரக்கன்றுகளை நட்டு மழை பொழிய வேண்டிய அவசியத்தை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என தமிழக முதல்- அமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் காவேரிப்பட்டினம் ஊராட்சியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் பேரூராட்சித் தலைவர் அம்சவேணி செந்தில் குமார் 100 மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.