உள்ளூர் செய்திகள்

விழாவில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா மரக்கன்று நட்டபோது எடுத்தபடம். அருகில் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

ஆலங்குளம் அருகே தி.மு.க. சார்பில் மரம் நடும் விழா

Published On 2023-08-25 14:14 IST   |   Update On 2023-08-25 14:14:00 IST
  • நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கான வினாடி- வினா போட்டி நடைபெற்றது.
  • மாநில சுற்றுச் சூழல் அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணா மாணவ- மாணவிகளுக்கு வினா, விடை போட்டி நடத்தி பரிசளித்தார்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் மரம் நடும் விழா மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான வினாடி- வினா போட்டி நடைபெற்றது.

விழாவிற்கு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் சபி சுலை மான், ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் மாநில சுற்றுச் சூழல் அணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணா சிறப்புரையாற்றி மரம் நடும் விழாவை தொடங்கி வைத்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வினா, விடை போட்டி நடத்தி பரிசளித்தார். விழாவில் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், கீழப்பாவூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன் அறிவழகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவக்குமார், மாஞ்சோலை துரை, நெட்டூர் கிளைச் செயலாளர் கணேசன், மகேஷ் பாண்டியன், தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News