உள்ளூர் செய்திகள்

சாலையில் விழுந்த மரம் ஊழியர்களை கொண்டு அகற்றப்பட்டது.

சிறுமலையில் கன மழையால் சாலையில் விழுந்த மரம் அகற்றம்

Published On 2023-11-04 05:54 GMT   |   Update On 2023-11-04 05:54 GMT
  • சிறுமலை பகுதிகளில் கனமழை பெய்ததில் 18வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது.
  • போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் இருந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரத்தில் நேற்று கனமழை பெய்தது.இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.இந்த நிலையில் நேற்று சிறுமலை பகுதிகளில் கனமழை பெய்ததில் 18வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

இதனால் அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில்,வனச்சரக அலுவலர் மதிவாணன் தலைமையில்,சிறுமலை பிரிவு வனவர் சரவணன் மற்றும் வனச்சரக பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

பின்னர் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் இருந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News