கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
மானாவாரி மேம்பாட்டு திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
- விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.
- கால்நடை வளர்ப்பினை ஊக்கப்படுத்துதல் பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தொட்டபடகாண்டஅள்ளி கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் மானாவாரி மேம்பாட்டு திட்டம் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் கால்நடைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் வழங்குதல், கால்நடை பராமரிப்பு முகாம் நடத்துதல் கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய நோய் கட்டுப்பாட்டு மேலாண்மை, கால்நடைகளுக்கு காப்பீடு வழங்குதல், கோடை உழவு செய்தல், மானாவாரி சாகுபடியை மேம்படுத்துதல், உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரித்தல், மழை நீர் சேகரிப்பு முறைகளை மேம்படுத்துதல், கால்நடை வளர்ப்பினை ஊக்கப்படுத்துதல் பற்றி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர் திருமால், வேளாண்மை உதவி அலுவலர் கோவிந்தன், உதவி தொழில்நுட்ப மேலாளர் கிருஷ்ணமூர்த்தி,மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.