பயிற்சியில் கலந்து கொண்ட டிரைவர், கண்டக்டர்களை படத்தில் காணலாம்.
தருமபுரியில் டிரைவர்கள்-கண்டக்டர்களுக்கு பயிற்சி
- கண்டக்டர்களுக்கு பணியின் போது பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டியது எப்படி? என்பது குறித்து கூறப்பட்டது.
- மனச்சுமை இல்லாமல் பணியாற்றுவது எப்படி? குறித்து விளக்கப்பட்டது.
தருமபுரி,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பணியாளர்களு க்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கலந்தாய்வுக் கூட்டம் தருமபுரி பாரதிபுரத்தில் உள்ள மண்டல தலைமை அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்த பயிற்சி கலந்தாய்வு கூட்டத்தை அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் பொன்முடி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.
பொது மேலாளர் ரவிலட்சுமணன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு பணியின் போது பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டியது எப்படி? என்பது குறித்தும், மனச்சுமை இல்லாமல் பணியாற்றுவது எப்படி? என்பது குறித்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி கூட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர்கள் ராஜராஜன், கலைவாணன், கோட்ட மேலாளர் அரவிந்தன், உதவி மேலாளர் ஹர்ஷபாபு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.