உள்ளூர் செய்திகள்

நில அளவர், வரைவாளர்களுக்கான பயிற்சி வகுப்பை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர் தொடங்கி வைத்து பேசியபோது எடுத்தபடம்.  

கடலூர் அருகே 102 புதிய நில அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு பயிற்சி

Published On 2023-05-22 08:43 GMT   |   Update On 2023-05-22 08:43 GMT
  • நிள அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு 90 நாட்களுக்கான நில அளவை பயிற்சி கடலூர் அருகே நடைபெற்றது.
  • செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது.

கடலூர்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 922 நில அளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் கடந்த 15-ந்தேதி தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனை தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்ட 102 நிள அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு 90 நாட்களுக்கான நில அளவை பயிற்சி கடலூர் அருகே நடைபெற்றது. 

மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், உதவி இயக்குனர்கள் திருநாவுக்கரசு, சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை ஆற்றினார்கள். இதில் பங்கேற்றுள்ள 102 நில அளவர் மற்றும் வரைவாளர்கள் பயிற்சி முடித்து கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பணியில் ஈடுபட உள்ளனர். பயிற்சியில் ஈடுபடும் நில அளவர்கள் மற்றும் வரைவாளர்கள் செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது. கடலூர் கோட்ட ஆய்வாளர் நாராயணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News