உள்ளூர் செய்திகள்

மாணவிகள் சார்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

Published On 2023-01-21 15:41 IST   |   Update On 2023-01-21 15:41:00 IST
  • விவசாயியின் நிலத்தில் இந்த பயிற்சி நடந்தது.
  • மண் வளத்தின் முக்கியத்துவம் மற்றும் மண் சேகரிப்பு குறித்து பயிற்சி அளித்தனர்.

ஓசூர்,

ஓசூர் அருகே அத்திமுகத்தில் உள்ள அதியமான் வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டுமாணவிகள், ஊரக வேளாண்மை பயிற்சி அனுபவத்திற்காக, மண் மாதிரி சேகரிப்பு பயிற்சி நடத்தினர்.

இதையொட்டி, தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுக்கா சாமிசெட்டிப்பட்டி கிராமத்தில் பச்சையப்பன் என்ற விவசாயியின் நிலத்தில் இந்த பயிற்சி நடந்தது.

பயிற்சியில் வேளாண்மை கல்லூரியின் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் தையல்நாயகி, மற்றும் மாணவிகளான அக்ஷயா பச்சிகலா, கிருத்திலோஷ்னி, பூங்குழலி, பிரகதீஸ்வரி, பிரஷாந்தி மேகலா, பிரசுனா, ராகித்தியா, ரக்ஷனா, வெண்ணிலா, சரிதா, சவுஜன்யா ஆகியோர் விவசாயிகளுக்கு, "மண் வளத்தின் முக்கியத்துவம் மற்றும் மண் சேகரிப்பு குறித்து பயிற்சி அளித்தனர்.

Tags:    

Similar News